Friday, November 13, 2009

jokss


ஆசிரியர்: இந்த உலகத்தில் முடியாதது எதுவும் இல்லை.

ஒரு பையன் எழுந்து உடனே..
"சார். டூத்பேஸ்ட்டை அதோட ட்யூப்ல இருந்து எல்லாத்தையும் வெளியே எடுத்துட்டு திரும்ப‌ உள்ள வைக்க முடியுமா"
====================================================== ஒருவர் டிரைனில் கடைசி பெட்டியில் பிரயாணம் பண்ணி, மிகவும் கஷ்டப்பட்டுப்போனார். ட்ரெய்ன் எந்த ஸ்டேஷனில் நின்றாலும், கடைசி பெட்டிக்கு மட்டும் பிளாட்ஃபார்மே கிடையாது. சாப்பாடே கிடைப்பதில்லை. நொந்து போனார். பொறுத்துப்பொறுத்து பார்த்து, ஒரு கம்ப்ளைண்ட் எழுதினார்.

"இனிமேல், ட்ரெய்னில் கடைசிப்பெட்டி என்பதே இருக்கக்கூடாது. அப்படி, கடைசிப்பெட்டி வைப்பது கட்டாயம் என்றால், தயவு செய்து, ட்ரெய்னில் நடுவில் வையுங்கள்."

*********
எலிக்கு பிடிக்காத படிப்பு எது?
பொறியியல்.
*********
எங்க "ஆ" காட்டுங்க பாககலாம்...
ஏன் டாக்டர் நீங்க "ஆ" பார்த்ததே இல்லையா...?

***********

என்னது பேப்பர் ரோஸ்ட் ஓரத்திலே வரிசையா ஓட்டை இருக்குது?
இது கம்ப்யூட்டர் பேப்பர் ரோஸ்ட்

***********

நகை போடாமல் இருப்பதே மேல்...
ஏன்
நகை போட்டா அது ஃபீமேல்..

***********

என்னங்க நாலு போன்கால் பேசிட்டு ஒண்ணுக்கு காசு தர்றீங்க?....
யோவ்... நாலு கால் ஒண்ணு தானேயா.....

***********

ஒரு பையன் தன் தலைக்கடியில் டிக்ஸ்னரியை வச்சுகிட்டு தூங்குறான், ஏன்?
ஏன்னா... அவனுக்கு அர்த்தமில்லாத கனவா வருதாம்...

***********

ஒரு பையன் ஸ்கேலை கையில் வச்சுகிட்டு சாப்பிடறான்.. ஏன்?
ஏன்னா.... அவன் அளவோடு சாப்பிடறான்

***********

உங்க மகன் சிகரெட் பிடிகிறானே.. உங்களுக்கு தெரியுமா..?
எனக்கு சிகரெட் பிடிக்க தெரியாதுங்க...

************
ஒரு பாதிரியாரிடம் ஒரு பெண் முறையிட்டாள்.." ஃபாதர்.. நான் இரண்டு பெண் கிளிகள் வளர்க்கிறேன்.. அவை எப்போதும் டி.வி.யில் வரும் காதல் பாட்டுகளையே பாடிக்கொண்டு இருக்கின்றன. என்ன செய்வது..?
ஃபாதர் சொன்னார்.." என்னிடமும் 2 ஆண் கிளிகள் உள்ளன.. எப்போதும் கடவுளை வேண்டி, தியானம் செய்து கொண்டும் பக்திப் பாடல்களைப் பாடிக்கொண்டும் இருக்கின்றன. உன் கிளிகளை அவையுடன் ஒரு வாரம் பழகவிட்டால், நல்ல பழக்கங்களை கற்றுக்கொண்டுவிடும்."
அந்தப் பெண்ணுக்கு இது நல்ல யோசனையாக தோன்றவே மறுநாளே கொண்டுவந்து விட்டாள்.
பாதிரியார் பெருமையுடன், "என் கிளிகள் என்ன செய்கின்றன என்று பார்" என்றார்.
அவருடைய ஆண் கிளிகள் இரண்டும் கடவுளை மனம் உருகி வேண்டிக்கொண்டிருந்தன. பெண் கிளிகளோ, "அழகிய அசுரா.. அழகிய அசுரா.. அத்து மீற ஆசை இல்லையா..?" என பாடின.
தியானத்திலிருந்த ஆண்கிளிகளில் ஒன்று சட்டென்று பெண்கிளிகளைப் பார்த்து பின்னர் தன் நண்பனை உசுப்பி, டேய்.. அங்க பாரு.. நம்ம வேண்டுதல் பலிச்சுடுச்சு" என்றது உற்சாகத்துடன்...!!!!
************
காதலியை பார்க்க போகும் போதெல்லாம் அவர் ஏன் கற்பூரம், வாழைப்பழம், தேங்காய் வாங்கிட்டு போகிறார்?
அது தெய்வீக காதலாம்
*************
ஓடிப்போயிடலாமா டார்லிங்?
ஏன் இப்படி பயந்து சாகிறீங்க நடந்தே போகலாம்.
*************
ஓடிப்போயிடலாமா டார்லிங்?
ஏன் இப்படி பயந்து சாகிறீங்க நடந்தே போகலாம்.
**************"என்னோட‌ அப்பா ஒரே விர‌லால‌ எட்டு பேரை மேலே தூக்குவார்"

"எப்ப‌டி"

"அவ‌ரு லிப்ட் ஆப‌ரேட்ட‌ர்"
 ======================================================

மனைவி: என்னங்க... நீங்க எனக்கு நகையும்புடவையும் வாங்கித் தர்ற மாதிரி கனவு கண்டேங்க.

கணவன்: ம்.. உன் அப்பன் அந்த பில்லுக்கு பணம் கட்டுற மாதிரி எனக்கு கனவு வந்துச்சு...


3 comments:

நாஞ்சில் பிரதாப் said...

ஏய் குட்டி தேவதை... எல்லா ஜோக்கும் நல்லாருக்கு... கடைசியா சொன்னது டாப்பு...

பாலோவர் போடும்மா? எந்த ஊரு உங்களுக்கு???

angel said...

at the top in left the follower option is there

நாஞ்சில் பிரதாப் said...

at the top in left? but where it is? u have not added the follower widget.