Friday, May 7, 2010

மே தினம் ( மே 7)


மே தினம் என்று மே 7 அன்னிக்கு போஸ்ட் போடுறாளே அப்படின்னு யோசிக்காதிங்க ஏன்னா மே ஏழும் மே மாதத்தில் உள்ள தினம் தான். ம்ம் சரி எல்லா மே தினத்தையும் விட்டுட்டு இன்னிக்கு மட்டும் நான் இப்படி போஸ்ட் போட்டு உங்கள எல்லாம் நான் ஏன் கஷ்டப்படுத்துறேன்னு யோசிக்கிறிங்களா (என்னது இல்லையா ..... இவ்வளோ தைரியமா நீங்க சொன்னா கண்டிப்பாக யூத் க்ளப்பிலிருந்து உங்கள் வீட்டுக்கு தமிழ் படம்  சி.டி அனுப்பி வைத்து உங்களை 20+ முறை பார்க்க வைக்க ஏற்பாடு செய்யப்படும்). அதுக்கு காரணம் கடைசியில்.

இந்த மே ஏழு உலகத்தில் குறிப்பிடக்கூடிய நல்ல நாள்களில் மற்றும் நல்லவர்கள் பிறந்த நாள்களில் ஒன்று ..... யாரையா இன்னிக்கு பிறந்த அந்த நல்ல மனிதன்னு யோசிக்கிறிங்களா . அது தான் ரபிந்தர்னாத் தாகூர் என்னும் வங்காள கவிஞன் , எழுத்தாளர் நோபல் விருது பெற்றவர்.

இந்த ஏழு என்கிற எண்ணில் 12 மாதங்களிலும் பிறந்தவர்களை பற்றி சற்று ஆராய்ந்தால் ( அதுக்கெல்லாம் ஏங்க நேரமா ................அப்போ நான் ஆராய்ந்து கண்டுபிடிச்சத படிச்சுட்டு போங்கப்பா) அவர்களுள் பலர் கலை சம்மந்தம் உள்ள துறைகளிலே இருப்பர் . உதாரனமாக Sinclair Lewis, Billie Holiday, rabindarnath tagore ஏன் நமது கமலஹாசனும் 7ஆம் தேதியில் பிறந்தவர் தான். இதெல்லாம் விடுங்கள் British Royal Theatre திறந்ததும் இன்றுதான்.

இப்படி மட்டும் சொல்லிட்டு போகிற அளவுக்கு நான் ரொம்ப நல்ல பிள்ளை கிடையாது . நானும் ஒரு சாதராண நல்ல பிள்ளை தான் . so, my friends உண்மைய சொல்ல வேண்டிய நேரம் வந்துடிச்சு என்னை யாரும் தடுக்காதிங்க. இன்னிக்கு பிறந்த அந்த நல்ல மனிதர்களுள் ஒரு தேவதையும் (ஏஞ்சல் என்னும் பெயருக்கு நேரடி தமிழ் மொழி பெயர்ப்பு தேவதை) உண்டு . அது அடியேன் தான். நானும் கலை துறையில் நாளை வரலாம் அதாவது surgery specialist ஆகவோ .(அதுல தைக்க வேண்டும் ஓட்டை போடவேண்டும் அல்லவா).

பி.கு :-  ம்ம்ம் அப்பறம் b'day treat கேட்பவகளுக்கு, நான் உங்களுக்கு என் பாசத்தை காட்ட வேண்டும் அல்லவா எனவே நானே சமைத்து தருகிறேன் . இதற்கு மேலும் நான் வருகிறேன் என தைரியம் உங்களூக்கு இருந்தால் உங்களை கடவுள் காப்பாற்றட்டும். இத்துடன் இந்த போஸ்ட்டை நிறைவு செய்கிறேன் அதற்கு முன் எல்லாரும் கமெண்ட் போட்டுட்டு போங் . இல்லனா நான் சமைச்ச சாப்பாடு உங்க வீட்டுக்கு பார்சல்............