Wednesday, April 14, 2010

டாக்டர். பீமாராவ் ராம்ஜி அம்பேத்கர் .

14 ஏப்ரல் 1891 ஆம் ஆண்டில் ம்ஹவ் (M.P) ஓர் குழந்தையை பிமாபாய் என்னும் பெண்மனி ஈன்றார். "தலித்" என்னும் ஒதுக்கிவைக்கப்பட்ட ( b4 1947 ) சமுகத்தை மாற்ற அச்சமுகத்தில் பிறந்தார். மக்களிடையே வேற்றுமை ஒளிக்க; அநீதியை எதிர்க்க; ஒற்றுமையை வளர்க்க தோன்றியவர், டாக்டர். பீமாராவ் ராம்ஜி அம்பேத்கர் .

இவரைப் பற்றி நாம் அனைவரும் அறிந்த விஷயங்கள் சிலவற்றை பார்த்துவிட்டு அடுத்து அவர் வாழ்க்கை வரலாற்றை பார்ப்போம். இவரது இயற்பெயர் சக்பால். அம்பேத்கர் என்னும் தன் ஆசிரியர் மீது கொண்ட பற்றுனால் தம் பெயரை அவர் அம்பேத்கர் என மாற்றிக்கொண்டார். இவர் இவரது பெற்றோருக்கு 14வது பிள்ளை. ராம்ஜி மளோஜி சக்பால் ( தந்தை ) இந்திய ராணுவத்தில் பிரிட்டிஷிடம் பணியாற்றினார். எனவே தம் மக்களை govt. பள்ளியில் படிக்க வைத்தார்.

ஒவ்வொருவரின் வாழ்விலும் சிறு வயதில் நடந்த சம்பவங்கள் மனதில் ஆழ பதிந்து நம் பிற்கால வாழ்வை வளப்படுத்தும் என்பது மனோதத்துவ நிபுணர்களது கருத்து. அதற்கேற்றார் போல் இவர் வாழ்விலும் ஓர் சம்பவம் நடந்தது. இவர் அரசு பள்ளியில் படித்தாலும் இவர் மீது தீண்டாமை என்னும் கொள்கை கடைப்பிடிக்கபட்டது. இவரும் மற்ற தாழ்த்தப்பட்ட மாணவர்களும் வகுப்பறையின் வெளியே அமர்த்தப்பட்டனர். மேலும் அவர்களுக்கு தண்ணி வேண்டுமெனில் அவர்களாக எடுத்து அருந்த கூடாது என்னும் முறை பின்படுத்தப்பட்டது. அங்குள்ள பியுன் தண்ணியை சற்று உயரமான இடத்தில் இருந்து ஊற்ற அதை இவர்கள் குடித்தனர். இவ்விரு சம்பவங்களும் அவர் மனதில் ஆழ பதிந்தது. இவற்றை விட்டு  வெளியே வர வேண்டும் என எண்ணினார்

.

பின்னர் தம் அறிவு திறனை நிருப்பித்து பல doctorate பட்டங்களை Columbia University மற்றும் London School of Economics ஆகிய உயரிய நிறுவனங்களில் பெற்றார். மேலும் இவர் இந்தியாவில் ஓர் உயரிய scholar என கருதியமையால் Indian act of 1919 அமைப்பதில் ஒர் அமைப்பாளராக இருந்தார். இதில் இவர்  separate electorates based on castes and religions என்பதை அமைத்தார். இதை காந்தி எதிர்த்ததால் Poona pact என்பதன் மூலம் கைவிட்டார்.

இவருடைய ஆசிரியர் இவருக்கு புத்தரின் வாழ்க்கை வரலாற்று நூலை பரிசாக தந்தார். அதன் பின் இவர் புத்த மதத்தின் மீது அதீத ஈடுப்பாடு கொண்டார். இவர் ஆயிரக்கணக்கான தலித்களை புத்த மதத்திற்கு தழுவ உதவினார்.

பின்னர் இந்தய சுதந்திரம் பெற்ற பின் Indian Constitiution அமைப்பதில் பெரும் பங்காற்றினார். மேலும் இவர் இந்தியாவின் முதல் சட்ட மந்திரி ஆவார். இவர் 6 டிசம்பர் 1956 சர்க்கரை நோய் காரணமாக உயிர் துறந்தார்.

பி.கு: நான் எழுதியதில் பராவாயில்லை ஏஞ்சல் நாமளும் சுமாரா எழுதியிருக்கோம் என்று satisfaction தந்த பதிவு இது. இந்த போஸ்ட் பலரை சென்றடைய எல்லாரும் வோட் போட்டுட்டு போங்க. கமெண்ட் போட்டா இன்னும் சந்தோஷமாக இருக்கும். இப்படி செஞ்சா எனக்கும் ஒரு encouragementஆ இருக்கும்.

so all friends caste your vote for this post in tamilish and post your comments here.

Monday, April 12, 2010

oh day holiday

ஹப்பா! என்ன நிம்மதி ஒன்றரை வருஷம் பட்ட கஷ்டமெல்லாம் இனி வேணாம். எங்க வீட்லயும் யாரும் படி படின்னு சொல்லி டென்ஷன் ஆக்க வேணாம்.

back to march 23rd
முதன் முதலா பப்ளிக் எக்ஸாம். ம்ம்ம் no words to say the tension . it was abdruptly increased because of the phone calls from my well wishers. காலைல நிம்மதியான தூக்கத்தை கெடுத்து 6 மணிக்கு போன் பண்ணி all the best சொன்ன சித்தப்பா. ஸ்கூலுக்கு வந்து தைரியமா இருன்னு சொன்ன அப்பா அப்பாப்ப எவ்ளோ பாசம். 9.45-10.00 am எக்ஸாம் ஹாலில் சும்மா இருக்கனும் என்ன கொடுமை சரவணா அது . wrist watch ல் நொடி முள் எப்படி சுத்துமோ அப்படி என் மனம் விநாயகரை சுற்றியது 'ப்ளீஸ் விநாயகரே நான் நல்லா எழுதனும் ' .

on april 9 final day in my 10th history

எக்ஸாம் முடிஞ்சு வெளில வந்தப்போ oh ! what a beautiful time that was. i felt as if i m doing somersaults. (எவ்ளோ நாள் தான் வானத்தில் பறக்கிற மாதிரின்னு சொல்லறது). நல்ல ஆசைதீர ப்ரண்ட்ஸ் கிட்ட பேசிட்டு வீட்டுக்கு வந்த பின் கவிதை எழுதினேன் கவிதை தான் நம்புங்க

வானம் என் வசம் வருகிறது
காற்றில் மண் வாசம் நுகர்கிறேன்
மேகங்களை தாண்டியது போ உணர்வு
சாப்பிட எண்ணமில்லை
பசியில்லை
மதிய தூக்கமில்லை
இளமை துள்ளியது
உலக மனிதர்களூள் அதீத சந்தோஷத்தோடு இருக்கின்றேன்
அல்ல அல்ல திளைக்கின்றேன் மகிழ்வில்
ஹே! அடிச்சிக்கோ 10th நமக்கு முடிஞ்சு!

இதுதான் அந்த கவிதை ( இதெல்லாம் கவிதையான்னு கேக்காதீங்கப்பா. இப்போ இப்படி ஆரம்பித்தால்  தான் வருங்காலத்தில் நல்லா சரி சரி சுமாராவது எழுதலாம்).

விரைவில் பிரபஞ்சனின் 'தீவுகள்' மற்றும் பாலகுமாரின் 'கரையோர முதலைகள்' பற்றி ஒரு போஸ்ட் பார்ப்போம்.

ok எல்லாரும் போஸ்டையும் கவிதையும் படிச்சிங்கள.so கமெண்ட்டும் ஒட்டும் போட்டுட்டு போங்க. எல்லாரும் தொடர்ந்து வாங்க .